கரூரில் பெரியார் சிலை முன்பாக சுயமரியாதை திருமணம் செய்து கொண்ட இளம் ஜோடி

கரூர் லைட் ஹவுஸ் கார்னர் பகுதியில் அமைந்துள்ள பெரியார் சிலை முன்பாக இளம் காதல் ஜோடி சுயமரியாதை திருமணம் செய்து கொண்டனர்.

Share this Video

கரூர் மண்மங்கலம் அடுத்துள்ள நன்னியூர் புதூர் பகுதியைச் சேர்ந்த போர் மன்னன் மகன் அருண்குமார் (வயது 28). ஐடிஐ படித்துள்ளார். செவ்வந்திபாளையம் சாந்தான்களம் வடிவேல் மகள் சுகாசினி (19), கரூரில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இருவரும் காதலித்து வந்த நிலையில் இன்று கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட லைட் ஹவுஸ் கார்னர் பகுதியில் அமைந்துள்ள, தந்தை பெரியார் சிலை முன்பு சுயமரியாதை திருமணம் செய்து கொண்டு உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

Related Video