கரூர் மாரியம்மன் ஆலயத்தில் வைகாசி விழா! கம்பம் ஆற்றுக்கு அனும்பும் நிகழ்ச்சியில் அமைச்சர் செந்தில் பாலாஜி!

கரூர் மாரியம்மன் ஆலயத்தில் வைகாசி மாத பெருவிழாவை முன்னிட்டு கம்பம் ஆற்றுக்கு அனுப்பும் நிகழ்ச்சி தொடங்கியது. இதில் அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டார்.
 

Dinesh TG  | Published: Jun 1, 2023, 11:27 AM IST

தமிழகத்தில் மிகவும் புகழ்பெற்ற ஆலயங்களில் ஒன்றாக அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. கரூர் மாநகர் மையப்பகுதியில் அமைந்துள்ள இந்த ஆலயத்தில் வைகாசி மாத திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான கம்பம் ஆற்றுக்கு அனுப்பும் நிகழ்வு இன்று நடைபெற்றது. இதில், மின்சார துறை, மதுவிலக்கு துறை மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார்.

மாரியம்மன் ஆலயத்தில் இருந்து கம்பத்திற்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்று பின்னர் ஆலயத்தில் இருந்து கம்பம் ஆற்றுக்கு அனுப்பும் நிகழ்ச்சியில் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர்.

Read More...

Video Top Stories