ஹெல்மெட்டோட வாங்க, டிபன் பாக்சோட போங்க; கரூர் போலிசார் விப்புணர்வு

கரூரில் ஹெல்மெட் அணிந்து வந்த இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு டிபன் பாக்ஸ் வழங்கி போக்குவரத்து போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

First Published Mar 13, 2024, 9:38 PM IST | Last Updated Mar 13, 2024, 9:38 PM IST

தமிழகம் முழுவதும் ஹெல்மெட் அணிய வேண்டியதன் அவசியம் குறித்து, பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை  போக்குவரத்து போலீஸார் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சாலை விதிகளை மதிக்காமல் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்தும் வருகின்றனர்.

இந்த நிலையில் கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா அருகில் கரூர் மாநகர போக்குவரத்து ஆய்வாளர் சாஹிரா பானு தலைமையில், போக்குவரத்து போலீசார் இருசக்கர வாகனங்களில் வந்த வாகன ஓட்டிகளை நிறுத்தி, ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்த வாசகங்கள் அடங்கிய துண்டறிக்கைகளை வழங்கினர். மேலும், ஹெல்மெட் அணிந்து வந்த இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு டிபன் பாக்ஸ்களை பரிசாக வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Video Top Stories