கரூரில் அதிமுகவில் இணைந்த இஸ்லாமியர்கள்!

கரூரில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்னிலையில் இஸ்லாமியர்கள் அதிமுகவில் இணைந்தனர்

First Published Oct 8, 2023, 6:05 PM IST | Last Updated Oct 8, 2023, 6:05 PM IST

கரூரில் 70க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். கரூர் மாவட்டம், அதிமுக கட்சி அலுவலகத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து விலகி பலர் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் அரவக்குறிச்சி பேரூராட்சி திமுக 7ஆவது வார்டு செயலாளர் சிராஜுதீன் முன்னிலையில் 70க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்னிலையில் தங்களை அதிமுகவில் இணைத்து கொண்டனர். அதிமுகவின் இணைந்த புதிய உறுப்பினர்கள் அனைவரையும் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கட்சிதுண்டு அணிவித்து அனைவரையும் வரவேற்றார்.

சமீபத்தில் பாஜகவின் கூட்டணியில் இருந்து விலகிய அதிமுகவிற்கு சிறுபான்மையினர் தொடர்ந்து ஆதரவளித்து வருவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Video Top Stories