Minister Senthil Balaji arrest

கரூரில் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கைது வரவேற்கும் வகையில் பட்டாசு வெடித்துக் கொண்டாட வந்தவர்களை போலீசார் கைது செய்தனர்.
 

Share this Video

கரூர் பேருந்து நிலையம் அருகே அகில இந்திய சட்ட உரிமை கழகம் அமைப்பை சேர்ந்தவர்கள் மின்சாரம் மதுவிலக்கு ஆயத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதை வரவேற்று அந்த அமைப்பை சேர்ந்த நபர்கள் பட்டாசு வெடிக்க வந்தனர்.

அப்போது காவல்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி அவர்களை 3 நபர்களை கைது செய்து வேனில் அழைத்துச் சென்றனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அவர்கள் தேனி மாவட்ட பகுதியில் இருந்து வந்தவர்கள் என கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Video