ஊடகங்களை கையில் வைத்துக்கொண்டு எனக்கு எதிராக பாஜக சதி செய்கிறது - ஜோதிமணி

சில ஊடகங்களை கையில் வைத்துக்கொண்டு பாஜக நான் செல்லும் இடங்களில் எல்லாம் எனக்கு எதிராக சதி செய்வதாக கரூர் பாராளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி குற்றம் சாட்டி உள்ளார்.

Share this Video

கடந்த சில தினங்களுக்கு முன்னர் கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் கலந்து கொண்ட தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணியை அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் அடுக்கடுக்கான கேள்விகளால் துலைத்தெடுத்தார். இந்த விவகாரம் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது.

இந்நிலையில் எம்.பி. ஜோதிமணி வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், பாஜக நான் செல்லும் இடங்களில் எனக்கு எதிராக சிலரை விலைக்கு வாங்கி பிரச்சினை செய்கிறது. சில ஊடகங்களை கையில் வைத்துக்கொண்டு எனக்கு எதிராக சதி செய்வதாக குற்றம் சாட்டி உள்ளார்.

Related Video