நீ ஏன் போன? உன்ன யாரு கூப்டா? உனக்கு பதிலா நான் பொயிருக்கலாமே - விஜயகாந்தை மகனாக பாவித்து மூதாட்டி உருக்கம்

கேப்டன் விஜயகாந்துக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக கரூர் மாவட்டத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது புகைப்படத்தை பார்த்து மூதாட்டி ஒருவர் ஒப்பாரி வைத்த சம்பவம் காண்போரை கண்கலங்கச் செய்துள்ளது.

Share this Video

தமிழக சட்டமன்ற முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் மறைவைத் தொடர்ந்து பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் கரூர் மாவட்டம், பெரியார் காலனி பகுதியில் தேமுதிக சார்பில் கேப்டன் விஜயகாந்த் மறைவை ஒட்டி அஞ்சலிக்காக பேனர் வைக்கப்பட்டுள்ளது. 

அதில் பாப்பம்மாள் என்ற முதியவர் ஒப்பாரி வைத்த காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Related Video