Watch : கரூரில் முதன்முறையாக குளிரூட்டப்பட்ட நவீன காவல் உதவி மையம் திறப்பு!
கரூரில் முதல் முறையாக குளிரூட்டப்பட்ட நவீன காவல் உதவி மையத்தை எஸ் பி சுந்தரவதனன் திறந்து வைத்தார்.
கரூர் பஸ் நிலையம் ரவுண்டான அருகே போக்குவரத்து மற்றும் சட்ட ஒழுங்கை கண்காணிக்கும் வகையில், நகர காவல் உதவி மையம் நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. அதனை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுந்தரவதனம் துவக்கி வைத்தார். மேலும் கோடை காலம் தொடங்கி உள்ளதால் வெயிலில் பணியாற்றும் போக்குவரத்து காவலர்களுக்கு வெயிலை கட்டுப்படுத்தும் வகையில் சோலார் தொப்பியும், கைகளில் மட்டும் உறையும் கொடுக்கப்பட்டது.
மேலும் இன்று தொடங்கி கோடை காலம் முடியும் வரை போக்குவரத்து காவளர்களுக்கு நான்கு வேலைகளும் மோர் வழங்கப்படும் என்றும் சோலார் மூலம் இயங்கும் ஒளிரும் சாலை தடுப்பான்கள் கரூர் மாவட்ட எல்லைகளில் அமைக்கப்படும் என்றார். சென்ற வருடத்தை விட இந்த வருடம் விபத்தினால் ஏற்படும் மரணங்கள் சற்று குறைந்துள்ளது என்றும், விபத்து மரணங்களை குறைக்கும் வகையில் கரூர் மாவட்ட காவல் துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் சிறப்பாக எடுத்து வருகின்றனர் எனவும் எஸ்பி சுந்தரவதனம் தெரிவித்தார்.