Watch : வாழும் மனிதநேயம்! - ஆடையின்றி சாலையில் திறிந்த பெண்! ஆடை தந்து உதவிய பெண் போலீஸ்!
நாகர்கோயிலில் ஆடையின்றி சாலையில் திறிந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு, பெண் போலீஸ் ஒருவர் ஆடை போர்த்தி மானம் காத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலக சந்திப்பில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் ஆடையின்றி சாலை ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்தார். பெண்ணின் மானத்தைக் காக்க ஆடை போர்த்துவதற்கு பொதுமக்கள் தரப்பிலிருந்து யாரும் முன் வராமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த வேளையில், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் போலீஸ் சரஸ்வதி ஓடோடிச் சென்று மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணின் உடலில் ஆடை ஒன்றை போர்த்தி அவரது மானம் காத்து அங்கிருந்து அழைத்துச் சென்றார். இச்சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.