குமரியில் அமைச்சர் சேகர்பாபுவை முற்றுகையிட்ட பத்திரிகையாளர்களால் பரபரப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பத்திரிகையாளர்களை பார்த்து சற்று ஆவேசமானதால் சற்று பதற்றமான சூழல் ஏற்பட்டது.

Share this Video

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மாசி திருவிழாவின் இந்து சமய மாநாடு தொடர்பாக தமிழக இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு உடன் நாகர்கோவில் விருந்தினர் மாளிகையில் வைத்து முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் உள்பட இந்து அமைப்பினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

மூன்று கட்ட பேச்சுவார்த்தையில் இந்து சமய மாநாடு நடத்துவது தொடர்பான முடிவு எட்டப்படாததால் பரபரப்பான சூழல் உருவாகி உள்ளது. மேலும் பத்திரிகையாளர் சந்திப்பில் பத்திரிகையாளர்களை மிரட்டும் தொனியில் பேசிய அமைச்சர் சேகர் பாபுவை பத்திரிகையாளர்கள் முற்றுகையிட்டு கேள்வி எழுப்பியதால் பதற்றமான நிலை ஏற்பட்டது.

Related Video