அரசுப் பேருந்தில் மனநலம் பதிக்கப்பட்ட நபரை சரமாரியாக தாக்கிய ஓட்டுநர், நடத்துநர்

கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசுப் பேருந்தில் பயணம் செய்த மனநலம் பாதிக்கப்பட்ட பயணியை ஓட்டுநர், நடத்துநர் சரமாரியாக தாக்கும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

First Published Jan 5, 2024, 10:54 AM IST | Last Updated Jan 5, 2024, 10:54 AM IST

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது. இவர் சம்பவத்தன்று குலசேகரத்தில் இருந்து மார்த்தாண்டம் செல்லும் அரசு பேருந்தில் பயணம் செய்த போது நடத்துனர் பயண சீட்டுக்கு பணம் கேட்டுள்ளார். அப்போது மணிகண்டன் வாக்குவாதம் செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பேருந்தினுள் இளைஞரை கொடூரமாக தாக்கியுள்ளனர். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

Video Top Stories