Watch : கொல்லங்கோடு பத்ரகாளியம்மன் தூக்க திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்! அலைமோதிய பக்தர்கள் கூட்டம்!
கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்திபெற்ற கொல்லங்கோடு பத்ரகாளியம்மன் திருக்கோவிலில் தூக்க திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. கேரளா தமிழகத்திலிருத்து லட்சகணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ஆலயங்களுள் ஒன்றாக கொல்லங்கோடு பத்ரகாளியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் மீனபரணி தூக்கத் திருவிழா வெகுவிமர்சையாக பத்துநாட்கள் நடைபெறும்.
இந்த ஆண்டு மீனபரணி தூக்கத்திருவிழா இன்று துவங்கியநிலையில் முன்னதாக கொல்லங்கோடு பத்ரகாளியம்மனின் தாய்கோவிலான வெஞ்கஞ்சி கோவிலிலிருந்து பெண்குழந்தைகளின் தாலப்பொலி, தாய்மார்களின் முத்துக்கொடை, மேளதாளங்களுடன் ஊர்வலமாக திருமுடிகள் எடுத்துவரபட்டு தூக்கமுடிப்புரை ஆலயத்திற்கு கொண்டுவரபட்டது.
தொடர்ந்து ஆலய தந்திரி தெற்கேடத்துமனை ஈஸ்வரன் போற்றி தலைமையில் திருக்கொடியேற்றபட்டு தூக்கதிருவிழா துவங்கியது. இந்த கொடியேற்ற நிகழ்ச்சியில் தமிழகம் மற்றும் கேரளாவிலிருந்து லட்சகணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். முக்கிய விழாவான 1000க்கு மேற்படுட குழந்தைகளுக்கான தூக்கத்திருவிழா வரும் 5ஆம்தேதி நடைபெறவுள்ளது குறிப்பிடதக்கது.