Watch : குமரி படகு சவாரிக் கட்டணம் உயர்வு! சுற்றுலா பயணிகள் அதிருப்தி!

கன்னியாகுமரி கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு இயக்கப்படும் படகு சவாரிக் கட்டணம் உயர்த்தப்பட்டுளது. இதனால், சுற்றுலாப் பயணிகள் அதிருப்தியடைந்துள்ளனர்.
 

First Published Mar 17, 2023, 2:34 PM IST | Last Updated Mar 17, 2023, 2:34 PM IST

கன்னியாகுமரிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் உள்ளூர் மட்டுமல்லாமல் வெளி மாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் தினசரி பல்லாயிரக் கணக்கானோர் வருகின்றனர், அவர்கள் கன்னியாகுமரி முக்கடலில் இருந்து எழும்ப கூடிய சூரிய உதயம் மற்றும் மாலை கடலில் மறைய கூடிய சூரிய அஸ்தமம் இவற்றைக் காண குடும்பத்துடன் காத்திருந்து இயற்கை அழகை ரசிப்பர், மேலும் கன்னியாகுமரி கடல் நடுவே அமைக்கப்பட்டுள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம், 133 அடி உயரமுள்ள திருவள்ளுவர் சிலைக்கு படகு மூலம் சென்று வருவர். இந்த படகு சேவையை பூம்புகார் போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்பட்டு வருகிறது. இதிலும் தினசரி 1000க்கும் மேற்பட்டோர் கடலில் படகில் சென்று வருகின்றனர்.

இந்நிலையில் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம், கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு செல்லும் படகு சவாரிக்கான கட்டணத்தை உயர்த்தி உள்ளது. சாதாரண பழைய கட்டணம் ரூ 50 ல் இருந்து தற்போது 25 ரூபாய் உயர்த்தி ரூ.75 ஆகவும், சிறப்பு கட்டணமாக இருந்த ரூ.200ல் இருந்து ரூ.100 உயர்த்தி ரூ.300 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் அதிருப்தியடைந்துள்ளனர்.
 

Video Top Stories