குமரியில் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் மாணவர்களை கம்பால் தாக்கும் வீடியோ வைரல்

கன்னியாகுமரி மாவட்டம் மருதங்கோடு அரசு மேல்நிலை பள்ளியில் தலைமை ஆசிரியர் மாணவர்களை பிரம்பு கம்பால் அடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share this Video

கன்னியாகுமரி மாவட்டம் மருதங்கோடு பகுதியில் ஆபிரகாம் நினைவு அரசு மேல்நிலைபள்ளி செயல்பட்டுவருகிறது இந்த பள்ளியில் அன்பழகன் என்பவர் தலைமையாசிரியராக பணியாற்றிவருகிறார் இவர் மாணவர்களை பிரம்பு கம்பால் அடித்து துன்புறுத்துவதாக அங்கு படிக்கும் மாணவர்கள் குற்றம் சாட்டிவந்த நிலையில் பள்ளிக்கு தாமதமாக வரும் மாணவர்களை பிரம்பால் அடிக்கும் வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது பள்ளி மாணவர்களை பிரம்பால் ஆசிரியர்கள் அடிக்கக்கூடாது என்ற தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தும் அந்த உத்தரவை காற்றில் பறக்கவிட்டு இது போன்று மாணவர்களை அடிக்கும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டுமென சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Related Video