Watch : புதுமண தம்பதிக்கு, மண் சட்டியில் விருந்து பரிமாறிய நண்பர்கள்!

கன்னியாகுமரி அடுத்த, கோழிப்போர்விளை பகுதியில் புதுமண தம்பதியருக்கு மண் சட்டியில் விருந்து பரிமாறி நண்பர்கள் அசத்தியுள்ளனர்.
 

First Published May 24, 2023, 10:57 AM IST | Last Updated May 24, 2023, 10:57 AM IST

கன்னியாகுமரி மாவட்டம் கோழிப்போர்விளை புங்கறை கிராமத்தை சேர்ந்தவர் விக்னேஷ் (29-வயது) இவர் ஜார்கண்ட் மாநிலத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரராக பணியாற்றி வருகிறார். இவரும் அதே பகுதியை சேர்ந்த பிரியா 10 ஆண்டுகளாக காதலித்து கரம் பிடித்துள்ளார். உற்றார் உறவினர்கள் முன்னிலையில் விமர்சையாக அண்மையில் திருமணம் நடைபெற்றது. இதில், மணமகனிம் நண்பர்கள், திருமணத்தை கோலாகலமாக்க முடிவு செய்து புதுமணத்தம்பதிக்கு மண்சட்டியில் விருந்து பறிமாரி அசத்தினர். மேலும், செண்டை மேளம் முழங்க குத்தாட்டம் போட்டு பெண் வீட்டில் கொடுத்த சீர் வரிசைகளை சுமந்தபடி நண்பனை வீட்டிற்கு அழைத்து சென்றனர்.



இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Video Top Stories