மீன் வரத்து குறைவு.. ராக்கெட் வேகத்தில் உயரும் மீன்கள் விலை - பொதுமக்கள் அதிர்ச்சி

அரபிக்கடல் பகுதியில் நிலவும் கடும் பனிமூட்டத்தால் மீன்பிடி தொழில் மந்தமடைந்ததால் கன்னியாகுமரியில் மீன் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

First Published Jan 10, 2023, 9:00 PM IST | Last Updated Jan 10, 2023, 9:02 PM IST

கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல், முட்டம், தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுகங்களை தங்குதளமாக கொண்டு சுமார் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.நடுக்கடலில் சுமார் 7-நாட்கள் வரை தங்கி மீன்பிடி தொழிலில் ஈடுபடும் விசைப்படகு மீனவர்கள் பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் காரணமாக 12 நாட்களுக்கும் மேலாக மீன்பிடிக்க செல்லாமல் இருக்கின்றனர்.

அரபிக்கடல் பகுதியில் நிலவும் கடும் பனி மூட்டத்தாலும் காற்றின் திசை மாறுபாடுகள் காரணமாகவும் ஆழ்கடல் மீன்பிடிப்பில் போதிய மீன்கள் கிடைக்காததால் 500க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் மீன்பிடி தொழிலை கைவிட்டு பாதியிலேயே மொத்தமாக கரை திரும்பி வருகின்றனர். மென் வரத்து குறைந்துள்ளதால் மீன்களின் விலை உயர்ந்துள்ளது.

குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் மீன்களை வாங்க வியாபாரிகள் போட்டி போட்ட நிலையில் மீன் விலை நாளுக்கு நாள் உயர்ந்து சாதாரணமாக கிலோ 200க்கு விற்பனையாகும் கட்டில் பிஷ் கணவாய் 500க்கும், 150 வரை விலை போகும் ஆக்டோபஸ் ரக கணவாய் மீன்கள் 350க்கும் விற்பனையானது. பருவ நிலை மாற்றங்களால், மீன் வரத்தின்றி தொடர்ந்து ஏமாற்றத்துடன் கரை திரும்பும் விசைப்படகு மீனவர்கள் பல லட்ச ரூபாய் நஷ்டம் அடைந்துள்ளனர்.

இதையும் படிங்க..Pongal 2023 : பொங்கல் தினத்துக்கு இத்தனை நாள் விடுமுறையா? கூடுதலாக 2 நாட்கள் லீவ் கிடைக்குமா?

இதையும் படிங்க..TN Assembly 2023: கொடநாடு சர்ச்சை முதல் ஆளுநரே வெளியேறு வரை.. சட்டப்பேரவையில் நடந்த தரமான 10 சம்பவங்கள் இதோ!!