கன்னியாகுமரியில் லாரி மீது இருசக்கரவாகனம் மோதி கேபிள் ஆபரேட்டர் சம்பவ இடத்திலேயே பலி

கன்னியாகுமரியில் லாரி மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் கேபிள் டிவி ஆபரேட்டர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

First Published Feb 6, 2024, 12:19 PM IST | Last Updated Feb 6, 2024, 12:19 PM IST

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே கணியான் குளம் பகுதியை சேர்ந்தவர் தாணுமலயா பெருமாள். இவர் கேபிள் ஆப்ரேட்டராக பணி புரிந்து வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று தக்கலை பகுதியில் இருந்து நாகர்கோவில் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது  சுங்கான்கடை பகுதியில் பக்கவாட்டில் வந்த லாரி மீது மோதி சம்பவ இடத்திலே உயிரிழந்தார். இது குறித்து இரணியல் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில்  பதபதைக்க வைக்கும் சி சி டி வி காட்சிகள் வெளியாகி உள்ளன.

Video Top Stories