மீண்டும் பழைய பார்முக்கு திரும்பும் அரிசி கொம்பன்; வீடியோ வெளியிட்டு வனத்துறை மகிழ்ச்சி
திருநெல்வேலி மாவட்டத்தில் விடுவிக்கப்பட்ட அரிசி கொம்பன் யானை தற்போது நலமுடன் இருப்பதாகக் கூறி வனத்துறை அதிகாரிகள் வீடியோ வெளியிட்டுள்ளனர்.
தேனி மாவட்டத்தில் இருந்து மீட்கப்பட்டு திருநெல்வேலி மாவட்ட வனப்பகுதியில் விடப்பட்ட அரிசி கொம்பன் யானை தற்போது கன்னியாகுமரி வனப்பகுதியான அப்பர் கோதையாறு பகுதியில் நலமுடன் சுற்றித் திரிவதாக வனத்துறை அதிகாரிகள் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
முன்னதாக திருநெல்வேலி மாவட்டத்தில் விடப்பட்ட அரிசி கொம்பன் உடல் மெலிந்து எலும்பும், தோலுமாக காணப்பட்டது. ஆனால், யானை புதிய சீதோசன நிலைக்கு மாற சற்று காலம் எடுக்கும் என்பதால் யானை மெலிந்ததாக தெரிகிறது. ஆனால் விரைவில் யானை பழைய உடல் நிலைக்கு திரும்பும்.
தற்போது வரை யானையை அதிகாரிகள், மருத்துவர்கள் கன்காணித்து வருவதாக தெரிவித்திருந்த நிலையில் தற்போது புதிய வீடியோவை வெளியிட்டுள்ளனர்.