குமரி கடலில் விடப்பட்ட 110 ஆமை குஞ்சுகள்
கடலில் வாழும் ஆமை இனங்கள் நாளுக்கு நாள் அழிந்து வருவதை தொடர்ந்து அதனை பாதுகாக்கும் வகையில் ஆமைக்குஞ்சுகள் நாகர்கோவில் அருகே ராஜாக்கமங்கலம் கடலில் விடப்பட்டன.
சுற்றுச்சூழல் பாதிப்பு காரணமாகவும், கடலில் ஏற்படும் மாற்றங்களின் காரணமாகவும் ஆமை இனங்கள் நாளுக்கு நாள் கடலில் அழிந்து வருகிறது. இதனை பாதுகாக்கும் வகையில் வனத்துறை சார்பில் ஆமைக்குஞ்சுகள் கடலில் விடப்பட்டு வருகின்றன. அதன்படி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே ராஜாக்க மங்கலம் கடற்கரையில் ஆமை குஞ்சு பொரிப்பகம் உள்ளது.
இங்கு ஏராளமான ஆமை முட்டைகள் சேகரிக்கப்பட்டு பொரிப்பதற்கு பாதுகாக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளன. தற்போது அவை குஞ்சு பொரித்துள்ளது. சுமார் 110 ஆமைக்குஞ்சுகள் வெளிவந்த நிலையில் இன்று அந்த ஆமைக்குஞ்சுகள் வனத்துறையினரால் கடலில் விடப்பட்டன. இதனைப் போன்று ஏராளமான ஆமை முட்டைகள் குஞ்சு பொரிப்பதற்காக வைக்கப்பட்டுள்ளன.