மழையையும் பொருட்படுத்தாமல் நடவு செய்த விவசாயிகள்; மின்னல் தாக்கி ஒருவர் பலி, 5 பேர் படுகாயம்
கன்னாயகுமரி மாவட்டத்தில் வயலில் நடவு பணியில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் மீது மின்னல் தாக்கியதில் ஒருவர் பலி, 5 பேர் படுகாயமடைந்தனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று பிற்பகல் முதல் இடி, மின்னலுடன் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் மழை பெய்து வந்தது. இந்நிலையில் மணவாளக்குறிச்சியில் பெரிய குளம் பகுதியில் நெல் வயல்களில் விவசாயிகள் மழையையும் பொருட்படுத்தாமல் சாகுபடி பணிகளில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது இடி, மின்னல் தாக்கியதில் சபரி ராஜா என்ற வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் உடன் நெல் வயலில் பணியாற்றிக் கொண்டிருந்த நேசபாய், செல்லத்துரை, செல்லப்பன், பிரபாகரன், தவசலிங்கம் உள்ளிட்ட ஐந்து பேரும் படுகாயம் அடைந்து ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுபவிக்கப்பட்டுள்ளனர். மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் மருத்துவமனையில் சென்று சிகிச்சை பெற்றவர்களை நலம் விசாரித்தார். மின்னல் தாக்கி விவசாயி ஒருவர் பலியான சம்பவம் இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.