இணையத்தில் வைரலாவதற்காக நடுரோட்டில் குளித்த இளைஞர்; 3,500 அபராதம் விதித்து வைரலாக்கிய காவல்துறை

இணையத்தில் வைரலாக வேண்டும் என்பதற்காக நடுரோட்டில் இருசக்கர வாகனத்தில் இருந்தவாறு குளித்த இளைஞருக்கு ரூ.3,500 அபராதம் விதித்து காவல்துறை அதிகாரிகள் வசூல் செய்தனர்.

Share this Video

ஈரோடு மாவட்டம் P.S.பார்க் சிக்னலில் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்திற்கு இடையூராக மோட்டார் வாகன விதிமுறைகளை கடைபிடிக்காமல் இருசக்கர வாகனத்தில் பக்கெட்டில் இருந்த தண்ணீரை தலையில் ஊற்றி கொண்டு இன்ஸ்டாகிராமில் விளம்பரத்திற்காக செல்போனில் பதிவுகளை எடுத்து பதிவிட்டு இடையூறு செய்தும், இளைய தலைமுறையினருக்கு தவறான வழிகாட்டியாக செயல்பட்டவரை, ஈரோடு டவுன் போலீஸ் நிலையம் அழைத்து வந்து, மூன்று வழக்குகள் பதிவு செய்து அபராதமாக ரூ.3500/- விதிக்கப்பட்டது.

இளைஞர்கள் இவரைப் போன்று தவறாக சட்ட விதிமுறைகளை மீறி செயல்பட வேண்டாம் என்று ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Related Video