ஈரோட்டில் தனியார் பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண்; நடத்துநரின் சாமர்த்தியத்தால் உயிர் தப்பிய பயணி

ஈரோட்டில் தனியார் பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண் பயணியை நடத்துநர் நொடிப் பொழுதில் தனது சயோஜித புத்தியை பயன்படுத்தி காப்பாற்றிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Share this Video

ஈரோட்டில் இருந்து மேட்டூருக்கு தனியார் பேருந்து ஒன்று புறப்பட்டது. இதில் ஈரோட்டில் இருந்து சித்தாருக்கு பயண சீட்டு எடுத்த பெண் ஒருவர் பயணம் செய்தார். சித்தார் அருகே வரும் போது பேருந்தில் இருந்து இறங்க பேருந்தின் முன்பக்க படிக்கட்டு அருகே வந்துள்ளார். அப்போது கையில் செல்போனுடன் நின்று கொண்டிருந்த காரணத்தில் உரிய பேலன்ஸ் இல்லாமல் முன்படிக்கட்டு வழியே தவறி விழுந்தார்.

அப்போது படிக்கட்டில் நின்று கொண்டிருந்த பேருந்து நடத்துனர் தனது சமயோஜித புத்தினால் கீழே விழுந்த பெண்ணின் தலைமுடியை பிடித்து பேருந்தின் உள்ளே இழுத்தார். இதனையடுத்து காப்பற்றப்பட்ட பெண் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு இறங்கி சென்றார். கடந்தாண்டு நடைபெற்ற சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Related Video