மலைப்பாதையில் அதிவேகமாக இயக்கப்பட்ட தனயார் பேருந்து மோதி பைக், லாரி ஓட்டுநர் படுகாயம்

ஈரோடு மாவட்டத்தில் மலைப்பாதையில் வேகமாக இயக்கப்பட்ட தனியார் பேருந்து லாரி மற்றும் இருசக்கர வாகனம் மீது மோதிய விபத்தில் இருவர் படுகாயமடைந்தனர்.

First Published Nov 24, 2023, 7:54 PM IST | Last Updated Nov 24, 2023, 7:54 PM IST

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப்பாதையில் வரட்டுபள்ளம் அணைப்பகுதியில் நேற்று முன்தினம் கர்கேகண்டியில் இருந்து பவானி நோக்கி வந்த தனியார் பேருந்து, எதிரே வந்த இருசக்கர வாகனம், கர்நாடக மாநிலம் சென்று கொண்டிருந்த லாரி ஆகிய வாகனங்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்து குறித்தான சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது,

சிசிடிவி காட்சிப்பதிவில் பர்கூர் மலைப்பாதையில் லாரி ஒன்று பழுதாகி இடது புறமாக நின்றுள்ளது. அப்போது தனியார் பேருந்தின் ஓட்டுநர் நின்று செல்லாமல் வேகத்தில் அதனை ஓவர் டேக் செய்த போது எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீதும், தொடர்ந்து லாரி மீதும் மோதி நிற்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

விபத்து தொடர்பாக தனியார் பேருந்தின் ஓட்டுநர் பாலாஜி (வயது 26) மீது பர்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்தில் லாரி ஓட்டுநர் சகாதேவன் (46), இருசக்கர வாகன ஓட்டுநர் தனபால் (55) ஆகிய இருவரும் படுகாயம் அடைந்த நிலையில் அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பேருந்தில் 30க்கும் மேற்பட்டோர் பயணித்த நிலையில் ஐந்து பேருக்கு மட்டும் லேசான காயங்கள் ஏற்பட்டது. அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

Video Top Stories