சத்தியமங்கலம் அடுத்த தாளவாடியில் பெய்த திடீர் கோடை மழை.. பொதுமக்கள் மகிழ்ச்சி.!!

சத்தியமங்கலம் அடுத்த தாளவாடியில் திடீர் கோடை மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Share this Video

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி மலை பகுதியில் இன்று மாலை திடீர் கோடை மழை பெய்தது. தாளவாடி மலைப்பகுதி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த இரண்டு மாதங்களாக கடும் வெயில் வாட்டி வந்தது. குளம்-குட்டைகள் வறண்டு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் விவசாய பணிகளும் பாதிக்கப்பட்டது 

இந்நிலையில், இன்று மாலை தாளவாடி, தொட்டகாஜனூர், கரளவாடி, சூசைபுரம், ஒசூர், கும்மிட்டாபுரம் ஆகிய பகுதிகளில் மிதமான மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது. திடீர் மழையால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Video