அரசுப்பள்ளி சுவரில் காவி உடையில் திருவள்ளுவர் படம்; அதிகாரிகளின் நடவடிக்கைக்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு

அரசுப்பள்ளியின் சுற்றுச் சுவரில் காவி நிற உடையுடன் வரையப்பட்ட திருவள்ளுவர் படத்தை அழிப்பதற்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Share this Video

ஈரோடு வட்டம் பேரோடு கிராமத்தில் அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியின் சுற்றுச் சுவரில் ஆறு மாதங்களுக்கு முன்பாக பல்வேறு தலைவர்களின் படங்கள் வரையப்பட்டன. அதில் திருவள்ளுவர் படத்திற்கு காவி கலர் உடை அணிந்து இருப்பது போல வரையப்பட்ட படம் சர்ச்சையை ஏற்படுத்தியது. 

இந்த நிலையில் நேற்று சுவரில் உள்ள காவி திருவள்ளுவர் படத்தை வெள்ளை நிறமாக மாற்ற பள்ளிக்கல்வி துறை முடிவு செய்தது. காவல் துறை உதவியுடன் பள்ளி நிர்வாகம் இணைந்து காவி நிறத்தை அழித்து, வெள்ளை உடை திருவள்ளுவரை வரைந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பணியை தடுக்கும் விதமாக பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் வரைந்த காவி திருவள்ளுவர் படம் அப்படியே இருக்க வேண்டும் என்ற கோஷம் எழுப்பினர். அந்த எதிர்ப்பையும் மீறி காவி திருவள்ளுவர் படம் அழிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Video