ஈரோட்டில் உரிமையாளர்களிடையே மோதல்; உணவகம் தீ வைத்து எரிப்பு

ஹோட்டல் கடைக்காரர்களுக்குள் ஏற்பட்ட தகராறு காரணமாக உணவகத்திற்கு நள்ளிரவில் தீ வைத்த சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share this Video

ஈரோடு மாவட்டம் நசியனூர் அருகே அருள்முருகன், சுகம் என இரு உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. இரு உணவகங்களையும் அர்ஜுனன் கோவேந்திரன் என இருவர் நடத்தி வருகின்றனர். உணவகம் முன்பாக நாய் ஒன்று படுத்து இருந்தது தொடர்பாக இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டது. தகராறு காரணமாக இரு தரப்பினரும் காவல் நிலையத்தில் புகார் அளிக்க இருந்த இருந்தனர். இந்நிலையில் நேற்று நள்ளிரவில் காரில் வந்த மர்மக்கும்பல் அருள் முருகன் உணவகத்தின் மீது மர்ம பொருளை வீசி தீ பிடிக்க வைத்தது.

இதில் உணவகம் முழுவதும் எரிந்து நாசமானது. இதனைத் தொடர்ந்து பெருந்துறை தீயணைப்பு துறையினர் நேரில் சென்று தீயை கட்டுப்படுத்தினர். இது தொடர்பாக அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி சித்தோடு காவல் துறையினர் சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Related Video