ஈரோட்டில் லாரியை வழிமறித்து கரும்புகளை ருசி பார்த்த காட்டு யானை; ஓட்டுநரை துரத்தி அட்ராசிட்டி

ஈரோடு மாவட்டம் பண்ணாரி அம்மன் கோவில் அருகே திடீரென வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை ஒன்று அவ்வழியாக சென்ற லாரியை வழிமறித்து கரும்புகளை ருசி பார்த்தது.

First Published Feb 23, 2024, 11:41 AM IST | Last Updated Feb 23, 2024, 11:41 AM IST

தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகம் இருப்பதால் தற்போது தண்ணீர் தட்டுப்பாடு தொடங்கிவிட்டது. வனப்பகுதிகளில் குடிநீர் இல்லாததால் வன விலங்குகள் குடியிருப்பு பகுதிகளை நோக்கி படையெடுக்கத் தொடங்கி விட்டன.

இந்நிலையில் ஈரோடு மாவட்டம் பண்ணாரி அம்மன் கோயில் அருகே காட்டுக்குள் இருந்து வெளியேறிய யானை ஒன்று அவ்வழியாக சென்ற கரும்பு லாரியை வழிமறித்து கரும்புகளை ஒவ்வொன்றாக எடுத்து ருசி பார்த்தது. மேலும் லாரியை எடுக்க முயன்ற ஓட்டுநரையும், உதவியளரையும் காட்டு யானை துரத்திய நிலையில்,

யானையிடம் இருந்து அவர்கள் இருவரும் லாகவமாக தப்பினர். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Video Top Stories