வாக்காளர்களுக்கு விநியோகிக்க கோவையில் இருந்து எடுத்து வரப்பட்ட 13 கி. வெள்ளி? அதிகாரிகள் அதிரடி சோதனை

தாராபுரம் அருகே கோவையில் இருந்து உரிய ஆவணங்களில் இன்றி எடுத்து வரப்பட்ட ரூ.15 லட்சம் மதிப்புள்ள 13 கிலோ வெள்ளியை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Share this Video

நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. அதன் அடிப்படையில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்குவதை தடுப்பதற்காக தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அந்த வகையில் ஈரோடு நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட தாராபுரம் சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது அவ்வழியாக மதுரையில் இருந்து கோவை சென்ற காரை சோதனை செய்தனர்.

அப்போது கோவை மாவட்டம் கலம்பாளையம் பகுதியைச் சேர்ந்த மருதாச்சலம் என்பவர் உரிய ஆவணம் இன்றி ரூ.15 லட்சம் மதிப்புள்ள 13 கிலோ வெள்ளி வளையல்கள், வெள்ளி கம்மல் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். உரிய ஆவணங்கள் இல்லாததால் தேர்தல் பறக்கும் படையினர் அதனை தாராபுரம் கோட்டாட்சியர் செந்தில் அரசனிடம் ஒப்படைத்தனர்.

Related Video