ஈரோடு: முதன் முறையாக நடைபெற்ற ஃபன் ஸ்ட்ரீட் நிகழ்ச்சி.. ஆயிரக்கணக்கான மக்கள் உற்சாகம் !!

ஈரோடு பெரியார்நகரில் உள்ள 80 அடி சாலையில், ஜே.சி.ஐ. ஈரோடு சார்பில், ‘ஃபன் ஸ்ட்ரீட்’ நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.

Share this Video

காவல்துறையினர் மற்றும் பொதுமக்களிடையே நல்லுறவை வளர்க்கும் வகையில் சென்னை, கோவை‌, திருச்சி மாவட்டங்களில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலைப் பொழுதில் இளைஞர்கள், சிறுவர், சிறுமிகள் என அனைத்து தரப்பு மக்களும் சாலைகளில் விளையாடி மகிழும் வகையில் 'ஹேப்பி ஸ்ட்ரீட்' என்ற தலைப்பில் பல்சுவை நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், ஈரோட்டில் இன்று முதன் முறையாக பெரியார் நகரில் உள்ள 80அடி சாலையில், போதைப்பொருள் ஒழிப்பை வலியுறுத்தி, 'ஃபன் ஸ்ட்ரீட்' நிகழ்ச்சி நடைபெற்றது. 

ஆடல், பாடல் 'ஃபன் ஸ்ட்ரீட்' நிகழ்ச்சியில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஈரோடு மாவட்டத்தின் முக்கிய அரசு அதிகாரிகளான ஈரோடு ஆட்சித் தலைவர் ராஜகோபால் சுங்காரா, மாநகராட்சி ஆணையாளர், துணை மேயர் உள்ளிட்டவர்களும், போலீஸ் அதிகாரிகளும் இதில் பங்கேற்றனர். நிகழ்ச்சிகளில் அனைத்து தரப்பு மக்களும் கலந்து கொண்டு ஆடல், பாடல் போன்ற கலை நிகழ்ச்சிகளுடன், பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள், சிலம்பம் சுற்றுதல், தற்காப்பு கலைகள், சைக்கிள் சாகசம் போன்ற விளையாட்டுகள் என தனித்திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். 

இந்த நிகழ்ச்சியில் இளைஞர்கள், இளம்பெண்கள், குடும்ப தலைவிகள் மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் என 3000க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றுள்ளதால், ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜவஹர் உத்தரவின் பெயரில், மாநகர துணை கண்காணிப்பாளர் ஆறுமுகம் தலைமையில், விரிவான போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடும் செய்யப்பட்டு உள்ளது.

Bank Holiday In August 2023 : ஆகஸ்ட் மாதம் 14 நாட்கள் வங்கி விடுமுறை... முழு விபரம் இதோ !!

Related Video