அசுர வேகத்தில் சீறிப்பாய்ந்த கனரக வாகனம்; கண்ணிமைக்கும் நேரத்தில் தூக்கி வீசப்பட்ட நபர் பலி

திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டியை அடுத்த ஆத்தூர் பிரிவு அருகே இரு சக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் இளைஞர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Share this Video

திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டியை அடுத்த ஆத்தூர் பிரிவு அருகே இருசக்கர வாகனம் - லாரி மோதி விபத்து. இருசக்கர வாகனத்தில் வந்த ஆத்தூரை சேர்ந்த ரமேஷ் குமார்(வயது 38) என்பவர் சம்பவ இடத்திலேயே தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தார். இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து வந்த பிரபாகரன் என்பவர் படுகாயம் அடைந்து திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இந்நிலையில் இந்தப் பகுதியில் அதிக அளவில் விபத்து நடந்து கொண்டிருக்கிறது. இந்த கோழி பண்ணை பிரிவில் வேகத்தடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர். விபத்து குறித்து செம்பட்டி காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் இருசக்கர வாகனத்தில் லாரி மோதும் பதற வைக்கும் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி உள்ளது.

Related Video