“இல்ல நீ போட்டோ தான் எடுக்குற” மழலை மொழியில் குழந்தையின் அழுகையும் கியூட் தான்

போட்டோ தான எடுக்கிற !  ஓரு நல்ல பிள்ளையே நல்ல பிள்ளையா தானே எழுதிக்கிட்டு இருக்கேன்! மழலைப் பேச்சில் உருவான க்யூட் வீடியோ தற்போது சமூகவலை தினங்களில் வைரலாகி கொண்டிருக்கிறது.

First Published Jul 5, 2023, 11:55 AM IST | Last Updated Jul 5, 2023, 11:55 AM IST

திண்டுக்கல் மாவட்டம் வ.உ.சி நகரை சேர்ந்த ஆனந்த் என்பவரின் மகள் சாய்சக்தி நிலா யுகேஜி படித்து வருகிறார். இவரது மனைவி அவரது மகள் சாய்சக்தி நிலவுக்கு வீட்டுப்பாடம் எழுத  சொல்லிக் கொடுத்துள்ளார்.  அப்போது அந்த சிறுமி வீட்டு பாடத்தை எழுதாமல் அடப்பிடித்து பிடித்து  எழுதிக் கொண்டிருந்தார். அவரது அம்மா அவரை திட்டியதால் அந்த குழந்தை  அழுகத் தொடங்கினார். அதை அவரது தந்தை ஆனந்த் தனது செல்போனில் வீடியோ எடுக்க தொடங்கினார்.   

உடனே அதைப்பார்த்த அந்த குழந்தை அழுது கொண்டே போட்டோ தானா எடுக்கிற !..போட்ட தானா எடுக்கிற!ஒரு நல்ல பிள்ளை எழுதிக் கொண்டு தான் இருக்கேன். போட்டோ எடுக்கிற என அழுது கொண்டே மழலைப் பேச்சில் பேசிய வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவு செய்தார். அந்தக் குழந்தையின் பேச்சு க்யூட் வீடியோ  தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

Video Top Stories