Watch : கொடைக்கானல் ஏரியில் பரிசிலில் சவாரி செய்த படி அமைச்சர்கள் ஆய்வு!

கொடைக்கானல் மன்னவனூர் ஏரியில் பரிசல் சவாரி செய்து தமிழக அமைச்சர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
 

Share this Video

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கோடை விழா மற்றும் 60-வது மலர் கண்காட்சியை துவக்கி வைக்க வந்த வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ பெரியசாமி, உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, பழனி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஐ பி செந்தில்குமார் ஆகியோர் வருகை புரிந்து இருந்தனர் .

இந்த நிலையில் நிகழ்ச்சி முடிந்த பின்னர் மன்னவனூர் சாகச சுற்றுலா பகுதியில் உள்ள ஏரியில் பரிசல் சவாரி செய்து ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து மேல் மலை பகுதியில் பல்வேறு இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்து அதிகாரிகளிடம் ஆலோசனையும் மேற்கொண்டனர். பரிசல் சவாரி செய்து ஆய்வு செய்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெகுவாக பரவி வருகிறது .\

Related Video