watch : திண்டுக்கல்லில் நடைபெற்ற சௌராஷ்டிர தமிழ் சங்கமம்!

திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற சௌராஷ்ட்ரா தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் குஜராத் மாநில பழங்குடியின மேம்பாட்டு துறை அமைச்சர் குபேர்பாய் திண்டோர் கோலாட்டம் ஆடி மகிந்தார்.
 

Share this Video

குஜராத் மாநிலத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 17ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை சௌராஷ்ட்ரா தமிழ் சங்கமம் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் ஓவியம், உணவு, உடை, விளையாட்டு உள்ளிட்ட கலாச்சார நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது. சௌராஷ்டிரா தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு நேரில் அழைப்பதற்காக குஜராத் மாநில பழங்குடியின மேம்பாட்டுத்துறை அமைச்சர் குபேர்பாய் திண்டோர் , பழங்குடியின மேம்பாட்டு துறை சசிவாலயா செயலாளர் முரளி கிருஷ்ணா ஆகியோர் திண்டுக்கல்லுக்கு வருகை புரிந்தனர்.

திண்டுக்கல் சௌராஷ்ட்ரா சபா சார்பாக பெண்கள் கோலாட்டம் ஆடி வரவேற்பு அளித்தனர். அதில் உற்சாகமடைந்த குஜராத் மாநில அமைச்சர் பெண்களுடன் இணைந்து அவரும் கோலாட்டம் ஆடி உற்சாகமடைந்தார் .

Related Video