திண்டுக்கல்லில் மாணவர்கள் விபூதி, பொட்டு வைக்க தடை; பெற்றோர் முற்றுகை

ஒட்டன்சத்திரம் அரசு  மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களை பொட்டு, விபூதி வைக்க கூடாது என்று தலைமை ஆசிரியை கூறியதால் மாணவர்கள் அதிர்ச்சி.

First Published Feb 22, 2023, 4:16 PM IST | Last Updated Feb 22, 2023, 4:16 PM IST

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் கே.ஆர் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் பள்ளி மாணவ, மாணவியரிடையே யாரும் நெற்றியில் பொட்டோ, விபூதியோ வைத்து வரக்கூடாது என்று பள்ளி நிர்வாகம் தரப்பில் அறிவிக்கப்பட்டதால் மாணவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

இதுகுறித்து மாணவ மாணவியர் அவர்களது பெற்றோரிடம் தெரிவித்ததால் கிராமப் பகுதியில் உள்ள பொதுமக்களும், பெற்றோரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் இதுகுறித்து பாஜக கட்சியினர் இன்று தலைமை ஆசிரியரை நேரில் சந்தித்து இது குறித்து விளக்கம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது அரசு ஆணையாக வெளியிட்டுள்ளது என்று கூறியுள்ளார். இவ்வாறு அவர்கள் பேசிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Video Top Stories