WATCH | கோடை மழையில் நிரம்பிய பழநிவரதமாநிதி அணை! விவசாயிகள் மகிழ்ச்சி!
கோடைமழை காரணமாக பழனி வரதமாநதி அணை நிரம்பியுள்ளது. இதனால், விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம், பழனியில் இருந்து கொடைக்கானல் செல்லும் சாலையில் அமைந்துள்ளது வரதமாநதி அணை. மேற்குத் தொடர்ச்சி மலைகளில் பொழியும் மழைநீர் வரதமாநதி அணையில் சேர்கிறது. டந்த சில தினங்களாக கொடைக்கானல் மலைப்பகுதியில் பெய்த கோடை மழை காரணமாக வரதமாநதி அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.
இந்நிலையில் வரதமாநதி அணையின் முழு கொள்ளளவான 67 அடி வரை நீர் நிரம்பி அணை வழிய துவங்கியுள்ளது. அணைக்கு வினாடிக்கு 15 கன அடி தண்ணீர் வரத்து உள்ளது . அணையிலிருந்து வினாடிக்கு 15 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. வரதமாநதி அணை தண்ணீரை பயன்படுத்தி 2000 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனம் செய்யப்படுகிறது.
மேலும் பழனி மற்றும் ஆயக்குடி கிராமத்திற்க்கு குடிநீர் தேவைக்கும் தண்ணீர் பயன்படுகிறது. கோடை மழையால் வரதமாநதி அணை நிரம்பியுள்ளதால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.