வெப்பத்தை தணிக்க நீச்சல் குளத்தில் ஆனந்த குளியல் போடும் பழனி கோவில் யானை

பழனி கோவில் யானை கஸ்தூரி கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க நீச்சல் குளத்தில் நீந்தி விளையாடியது.

First Published May 2, 2023, 5:50 PM IST | Last Updated May 2, 2023, 5:50 PM IST

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் சார்பில் 57 வயதான பெண் யானை கஸ்தூரி பராமரிக்கப்பட்டு வருகிறது. தற்போது பழனியில் கோடை வெயில் சுட்டெரித்து வருவதால் கோவில் யானை நீச்சல் குளத்தில் தண்ணீரில் விளையாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தண்ணீர் நிறுத்தப்பட்ட நீச்சல் குளத்தில் கஸ்தூரி யானை படுத்து, நீந்தி, விளையாடி மகிழ்ந்தது. 

கஸ்தூரி யானைக்காக கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பாக காரமடையில் கோவிலுக்கு சொந்தமான தோட்டத்தில் நீச்சல் குளம் அமைத்துக் கொடுக்கப்பட்டது. கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து காத்துக்கொள்ளும் வகையில் கோவில் யானைக்கு தர்பூசணி,  இளநீர் மற்றும் பழங்கள் உணவாக வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Video Top Stories