நிறைவு பெற்ற தைப்பூச திருவிழா; பழனியில் உண்டியல் காணிக்கையாக 20 நாட்களில் ரூ.3.4 கோடி வசூல்

தைப்பூச திருவிழா நிறைவு பெற்ற நிலையில், பழனி முருகன் கோவிலில் கடந்த 20 நாட்களில் 3 கோடியே 4 லட்சத்து 89 ஆயிரம் காணிக்கையாக வசூலாகி உள்ளது.

Share this Video

பழனி முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா நடைபெற்றதால் பக்தர்கள் வருகை கூடுதலாக இருந்தது. இந்த நிலையில் கடந்த 20 நாட்களில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை வகை பிரித்து எண்ணப்பட்டது. உண்டியல் காணிக்கையாக ரொக்கமாக 3 கோடியே 4 லட்சத்து 89 ஆயிரத்து 840 ரூபாயும் (ரூ.3,04,89,840), வெளிநாட்டு கரன்சி 631 நோட்டுகளும், தங்கமாக 221 கிராமும், வெள்ளியாக 9326 கிராமும் கிடைத்துள்ளது. உண்டியல் எண்ணும் பணியில் கோவில் ஊழியர்கள், கல்லூரி மாணவிகள், வங்கி ஊழியர்கள் ஈடுபட்டனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

Related Video