Neet Exam : இன்று நீட் தேர்வு - செயின், கம்மலை கழட்றி வைத்துவிட்டு தேர்வெழுதச் சென்ற மாணவர்கள்!
மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு இன்று நடைபெறுகிறது. தேர்வுக்கு வரும் மாணவ மாணவிகளிடம் கழுத்தில் இருந்த செயின் கம்மல் ஆகியவற்றை கழட்டுதல் மாணவருடைய வாட்சிகளை உருவுதல் போன்ற கடும் கெடுபிடிகளும் வழக்கம் போல் நடந்தன. திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் 5 மையங்களில் 2988மாணவ மாணவிகள் நீட் தேர்வு எழுதுகின்றனர்.
மருத்துவ படிப்புக்காக மாணவர்கள் சேர்க்கைக்காக பிளஸ் டூ முடித்த மாணவர்களுக்கு இன்று நாடு தழுவிய அளவில் நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. பிற்பகல் 2 மணி முதல் மாலை 5:20 வரை இந்த தேர்வுகள் இந்த மையங்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் நாடு முழுவதும் 499 மையங்களில் இந்த தேர்வு நடைபெறுகிறது.
திண்டுக்கல் மாவட்டத்தில் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 5 மையங்களில் இந்த தேர்வு நடைபெற்று வருகிறது. மாவட்டம் முழுவதும் சுமார் 2988 மாணவ மாணவியர்கள் இந்த தேர்வில் பங்கேற்றுள்ளனர். தேர்வுக்கு வந்த மாணவ மாணவிகளிடம் மாணவிகளின் காது மற்றும் கழுத்தில் இருந்த செயின், கம்மல் ஆகியவற்றை கழட்டுதல் போன்ற கெடுபிடிகளும் வழக்கம் போல் நடைபெற்றன. தேர்வு எழுத வந்த மாணவ மாணவிகளுக்காக பெற்றோர்களும் உடன் வந்தனர். கல்லூரியில் அந்தந்த தேர்வு மையங்களுக்கு வெளியே பெற்றோர்கள் காத்து நிற்கின்றனர்.