வளையோசை கல கல வென - மேடையில் பாடல் பாடி அசத்திய எம்.எல்.ஏ செந்தில்குமார்

அமைச்சர் ஐ.பெரியசாமியின் மகனும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான செந்தில்குமார் நிகழ்ச்சி ஒன்றில் தனது மனைவியுடன் உற்சாகமாக பாடல் பாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Share this Video

தமிழகத்தின் மூத்த அமைச்சர்களில் ஒருவரான ஐ.பெரியசாமியின் மகனும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான செந்தில்குமார் அவரது மனைவி பெர்சி செந்தில்குமார் உடன் கடந்த வாரம் திண்டுக்கல்லில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் இருவரும் சென்று இருந்தனர். அந்த நிகழ்ச்சியில் பாட்டு கச்சேரிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் அந்த ஆர்கெஸ்ட்ரா-வை நடத்துபவர் எம்.எல்.ஏ செந்தில்குமார் சொந்த ஊரான வத்தலகுண்டு பகுதியைச் சேர்ந்தவர் என கூறப்படுகிறது. 

உடனடியாக அவர் எம்.எல்.ஏ செந்தில்குமார் மற்றும் அவரது மனைவி மெர்சி செந்தில்குமாரை அன்பால் பாடல் பாடமேடைக்கு அழைத்துள்ளார். அப்போது இருவரும் சேர்ந்து மேடையில் ``வளையோசை கல கல கலவென`` என புன்னகை மற்றும் ஆடலுடன் பாடிய காட்சிகளை எம்.எல்.ஏ செந்தில்குமாரின் ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் பதிவு செய்தனர். தற்போது அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Related Video