கலைஞர் ஆட்சியிலேயே ரேஷன் பொருட்களை கடத்தியவன் நான்! இப்போது என்ன சின்ன முதல்வர் தானே! திமுக நிர்வாகி அராஜகம்
கலைஞர் ஆட்சியின் போதே ரேஷன் பொருட்களை கடத்தியதாக திமுக பிரமுகர் ஒருவர், ரேஷன் கடை மேலளாளரிடம் வாக்குவாதம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா டிடி 487 திண்டுக்கல் மாவட்ட நுகர்வோர் மொத்த விற்பனை பண்டக சாலையில் சேல்ஸ் மேலாக மேனகா என்பவர் பணியாற்றி வருகிறார்.
இந்த நுகர்வோர் பண்டகால சாலையில் பொருள் வாங்க வந்த, சந்தைப்பேட்டை நேருஜி நகர் வசந்தா நகர் பகுதியைச் சேர்ந்த திமுக அவைத்தலைவர் அமீர் பாட்ஷா என்பவர் மேனகாவிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்
கலைஞர் ஆட்சியின் போதே, மூடை மூடையாகவும் பெட்டி பெட்டியாக அரிசி பருப்புகளை தூக்கிச்சென்றோம், இப்போது என்ன சின்ன முதல்வர் ஆட்சி தானே என ஏளனமாக பேசினார். மேலும், பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரியிடம் ஒருமையில் பேசியதாகவும் கூறப்படுகிறது.
வைரலாகி வரும் இந்த வீடியோவைக் கண்டு, திமுக ஆட்சியில் அரசு அதிகாரிகள் பயந்து பயந்து வேலை பார்ப்பதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்