இயக்கப்படாத அரசுப் பேருந்து; உயிரை கையில் பிடித்துக் கொண்டு லாரியில் பயணிக்கும் மலை கிராம மாணவர்கள்

கொடைக்கானல் பூம்பாறை கிராமத்திற்கு காலையில் செல்ல வேண்டிய அரசு முறையாக இயக்கப்படாத காரணத்தால் பள்ளி செல்லும் மாணவர்கள் ஆபத்தான முறையில் லாரியில் பயணம் செய்யும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

First Published Sep 20, 2023, 1:01 PM IST | Last Updated Sep 20, 2023, 1:01 PM IST

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல்மலை கிராமமான பூம்பாறையில் உள்ள அரசு பள்ளி ஊருக்கு வெளியே 6 கிமீ தொலைவில் உள்ளது. இந்த கிராமத்திற்கு செல்லும் மாணவ, மாணவிகள் காலையில் 9 மணிக்கு வரும் அரசு பேருந்தில் செல்வது வழக்கம். இன்று அரசு பேருந்து ஊருக்குள் தாமதமாக வந்ததாலும், காலாண்டு தேர்வுகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள் பேருந்து இல்லாததால் கிராமத்தில் உள்ள லாரியில் பயணம் செய்த காட்சிகள் சமூக வலைதலங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் மாணவிகள் பலர் லாரியில் செல்ல விருப்பமில்லாமல் தேர்வுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து அரசு போக்குவரத்து கழக மேலாளர் ராதாகிருஷ்ணனிடம் கேட்டபொழுது, பழம்புத்தூர் கிராமத்தில் இருந்து காலையில் பூம்பாறை செல்லும் பேருந்து வழித்தடத்தில் மரம் விழுந்ததால் காலதாமதம் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார்.

Video Top Stories