கொடைக்கானல் வனப்பகுதியில் கொளுந்துவிட்டு எரியும் காட்டுத் தீ! - அரிய வகை மூலிகைகள் எரிந்து நாசம்

கொடைக்கானல் செண்பகனூர் சிட்டி வியூ பகுதியில் உள்ள வனப்பகுதியில் பல ஏக்கர் அளவில் காட்டு தீ பரவி வருகிறது. அரிய வகை மூலிகை செடிகள் எரிந்து நாசமாகியுள்ளன. வனத்துறையினர் தீயை அனைக்க தீவிரமாக போராடி வருகின்றனர்.
 

First Published Mar 15, 2023, 5:48 PM IST | Last Updated Mar 15, 2023, 5:48 PM IST

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது . இந்த நிலையில் வனப்பகுதியை ஒட்டி உள்ள விவசாய நிலங்களும் தொடர்ந்து கருகி வருகிறது .

வனப்பகுதிகளில் வெயிலின் தாக்கத்தின் காரணமாக சருகு இலைகளில் தீப்பிடித்தி காட்டுத் தீயானது ஏற்பட்டு வருகிறது. செண்பகனூர் அருகே உள்ள சிட்டி வியூ வனப்பகுதியில் காட்டுத் தீயானது பற்றி எரிந்து வருகிறது. இந்த காட்டுத்தீயால் அறிய வகை மரங்கள் செடிகள் மட்டுமின்றி மூலிகைச் செடிகளும் கருகி நாசமாகி வருகிறது.

மேலும், தொடர்ந்து பற்றி எரியும் தீயால் வனவிலங்குகளும் நகர் பகுதிக்குள் இடம்பெயரும் அபாயமும் ஏற்பட்டு வருகிறது. தீயை கட்டுப்படுத்துவதில் வனத்துறையினர் போராடி வருகின்றனர். காட்டுத் தீயை கட்டுப்படுத்த நவீன முறை கையாள வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.