Watch : கொடைக்கானல் பேரிஜம் ஏரியில் முகாமிட்டுள்ள யானைக் கூட்டம்! சுற்றுலா பயணிகள் செல்ல தற்காலிக தடை!

கொடைக்கானல் பேரிஜம் ஏரிப் பகுதியில், காட்டு யானைகள் குட்டியுடன் முகாமிட்டுள்ளது. அதனால், சுற்றுலா பயணிகள் பேரிஜம் பகுதிகளுக்கு செல்ல இன்று தற்காலிகமாக வனத்துறை தடை விதித்துள்ளது.
 

First Published Apr 6, 2023, 11:08 AM IST | Last Updated Apr 6, 2023, 11:08 AM IST

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் பெரும்பாலான சுற்றுலா இடங்கள் வனத்துறையின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், சுற்றுலா பயணிகளின் வருகையும் நாளுகுநாள் அதிகரித்து வருகிறது.

கொடைக்கானல் கீழ்குண்டாறு பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக காட்டு யானைகள் முகாமிட்டு இருந்தது. பின்ன் அங்கிருந்து பேரிஜம் ஏரிப் பகுதியில் தற்போது முகாமிட்டுள்ளன. தொடர்ந்து காட்டு யானை கூட்டம் உலா வருவதால் சுற்றுலா பயணிகள் செல்வதற்கு வனத்துறை இன்று தற்காலிகமாக தடை விதித்துள்ளது .

மேலும் யானையின் நடமாட்டத்தை வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர் . யானை அடர்ந்த வனப்பகுதிக்குள் இடம்பெயரும் பட்சத்தில் சுற்றுலா பயணிகளுக்கு மீண்டும் அனுமதி வழங்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.