பழனி முருகன் கோவிலில் முதல்வர் மனைவி துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம்

பழனி தண்டாயுதபாணி கோவிலில் முதல்வர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் சிறப்பு வழிபாடு மேற்கொண்டார்.

Share this Video

முருகனின் ஆறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் அவர்கள் இன்று மதியம் சாமி தரிசனம் செய்வதற்காக கார் மூலமாக வருகை தந்தார். தனியார் விடுதியில் சிறிது நேரம் ஓய்வு எடுத்து விட்டு மலைக்கோவிலுக்கு ரோப் கார் மூலமாக சென்ற அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. மலைக்கோவிலில் உள்ள ஆனந்த விநாயகரை வணங்கி விட்டு பின்னர் 12 மணிக்கு உச்சி கால பூஜையில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். பின்னர் கோவில் நிர்வாகம் சார்பில் துர்கா ஸ்டாலினுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. அதனை தொடர்ந்து ரோப் கார் வழியாக கீழே இறங்கி புறபட்டு சென்றார்.

Related Video