பாரில் வெடித்த கேங் வார்.. பீர் பாட்டிலால் ஒரே போடு.. தலையில் கொட்டிய ரத்தம்.. ஷாக்கிங் வீடியோ!

அருண் சிப்காட் அருகே உள்ள டாஸ்மாக்  மதுபான பாரில் மது குடித்துக்கொண்டு இருந்தார். அப்போது, அங்கு வந்த கொடைரோடு அருகேவுள்ள ராஜதானிக்கோட்டையைச் சேர்ந்த  மனோஜ்குமார், பள்ளபட்டி  தெற்குத்தெருவைச் சேர்ந்த மருதுபாண்டி மற்றும் தீபக் ஆகிய மூவரும் மதுபோதையில் அருணுடன் வாய் தவறாறில் ஈடுபட்டனர். 

First Published May 25, 2024, 12:55 PM IST | Last Updated May 25, 2024, 12:55 PM IST

திண்டுக்கல் அருகே மதுபான பாரில் ஏற்பட்ட மோதலில் பீர்பாட்டிலால் ஒருவரை கொடூரமாக தாக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடுட்டை அடுத்த பள்ளபட்டி அருகே  கவுண்டன்பட்டி  தெற்குத்தெருவைச் சேர்ந்த அருண் (24) . இவர் அப்பகுதியில் உள்ள சிப்காட் வளாகத்தில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.  இந்நிலையில் நேற்று அருண் சிப்காட் அருகே உள்ள டாஸ்மாக்  மதுபான பாரில் மது குடித்துக்கொண்டு இருந்தார். அப்போது, அங்கு வந்த கொடைரோடு அருகேவுள்ள ராஜதானிக்கோட்டையைச் சேர்ந்த  மனோஜ்குமார், பள்ளபட்டி  தெற்குத்தெருவைச் சேர்ந்த மருதுபாண்டி மற்றும் தீபக் ஆகிய மூவரும் மதுபோதையில் அருணுடன் வாய் தவறாறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

அப்போது வாய்தகராறு முற்றியதை அடுத்து இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்மடுள்ளது. அப்போது மனோஜ்குமார் தரப்பு அருணை பீர் பாட்டிலால் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில், படுகாயமடைந்த அருணை அக்கம் பக்கத்தினர் மீட்டு  திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பெற்று வரும் நிலையில்  தற்போது இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

சம்பவம் குறித்து அம்மையநாயக்கனூர் காவல் நிலையத்தில்  வழக்கு பதிவு செய்து மனோஜ்குமார், மருதுபாண்டி ஆகிய இருவரை கைது செய்தி சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள தீபக் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Video Top Stories