கொடைக்கானலில் மது போதை ஓட்டுநரால் தலைக்குப்புற கவிழந்த கார்!

முதல்வர் ஸ்டாலின் ஓய்வெடுத்து வரும் கொடைக்கானலில் மது போதை ஓட்டுநரால் கார் விபத்து ஏற்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Share this Video

தமிழக முதல்வர் ஸ்டாலின், திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு ஓய்வெடுக்க சென்றுள்ளார். இதனால், அங்கு போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், இன்று மாலை 4 மணியளவில் அப்சர் வெற்றியில் இருந்து லேக் செல்லும் செம்மண் மேடு எனப்படும் பகுதியில் இண்டிகா கார் ஒன்று விபத்துக்குள்ளானது.

விபத்துக்குள்ளான காரை ஓட்டி வந்த ஓட்டுநர் ஜஸ்டின் என்பவர் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால், கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த இருசக்கர வாகனங்கள் மீது மோதி, காம்பவுண்ட் சுவரில் இடித்து தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார், போக்குவரத்தை சீர் செய்ததுடன், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் ஓட்டுநர் ஜஸ்டின் காயங்களுடன் உயிர் தப்பினார்.

Related Video