Viral : ஆம்புலன்ஸ் உள்ளிட்ட மற்ற வாகனங்களை மறித்து கலாட்டா செய்த போதை ஆசாமி! தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்!

வேடசந்தூரில் உச்சி வெயிலில் பேருந்து நிலையம் முன்பாக 108 ஆம்புலன்ஸ் உள்ளிட்ட மற்ற வாகனங்களை மறித்து கலாட்டாவில் ஈடுபட்ட போதை ஆசாமியை, பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
 

First Published Apr 22, 2023, 12:35 PM IST | Last Updated Apr 22, 2023, 12:35 PM IST

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பேருந்து நிலையம் முன்பாக போதை ஆசாமி ஒருவர், சாலையில் தள்ளாடி தள்ளாடி வானங்களுக்க தொந்தரவு கொடுத்தார். 108 ஆம்புலன்ஸ் மற்றும் பிற வகனங்களும் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும், நடந்து செல்லும் பெண்கள் இளைஞர்களிடமும் தகராறில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

அனைவரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த நிலையில் முதியவர் ஒருவர் மட்டும் தைரியமாக குடி போதையில் கலாட்டாவில் ஈடுபட்ட நபரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தார்.



போலீசார் விசாரணையில், கலாட்டாவில் ஈடுபட்ட நபர் ராஜா என்பதும், தாராபுரத்தில் வேலை செய்து வருவதும் விடுமுறைக்காக ஊருக்கு வந்துள்ளதும் தெரியவந்தது. போதையில் இருந்ததால் ராஜாவை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

Video Top Stories