ஜெயிலர் படத்திற்கு கூடுதல் டிக்கெட் கேட்டு ரசிகர்கள் அடாவடி; திரையரங்க மேலாளர் மருத்துவமனையில் அனுமதி

வருகின்ற 10ம் தேதி வெளியாக உள்ள ஜெயிலர் திரைப்படத்திற்கு கூடுதல் டிக்கெட் கேட்டு ரஜினி ரசிகர்கள் திரையரங்க மேலாளரை தாக்கிய நிலையில், மேலாளர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Share this Video

சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிப்பில் வருகின்ற 10ம் தேதி ரஜினிகாந்த் நடிப்பில் உருவான ஜெயிலர் திரைப்படம் தமிழகம் முழுவதும் வெளிவர உள்ளது. இந்நிலையில் ஜெயிலர் திரைப்படத்திற்கான ஆன்லைன் டிக்கெட் பதிவு செய்வது தொடர்பாக பல்வேறு மாவட்டங்களில் திரையரங்கின் முன் ரஜினி ரசிகர்கள் அதிகமாக படையெடுத்து வருகின்றனர். 

அதேபோல் திண்டுக்களில் உள்ள ராஜேந்திரா, உமா திரையரங்கில் டிக்கெட் தொடர்பான ஆன்லைன் பதிவு குறித்து திரையரங்கு மேலாளர் மாயாண்டியிடம் விசாரித்ததாக கூறப்படுகிறது. இதில் நந்தவனப் பட்டியைச் சேர்ந்த கண்ணன் என்பவரும், நெட்டு தெரு ஜோசப் ஆகிய இருவரும் திரையரங்கு மேலாளர் மாயாண்டியிடம் கூடுதலாக டிக்கெட் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டு பின்னர் காதில் தாக்கியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக திரையரங்கு மேலாளர் மாயாண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Related Video