Watch : பழனி அருகே குடியிருப்பு பகுதியில் சுற்றி வரும் ஒற்றை யானை! மக்கள் பீதி!

பழனி அருகே கோம்பைபட்டி பகுதியில் சுற்றி வரும் ஒற்றைக்காட்டு யானை காட்டு யானையால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.
 

First Published May 8, 2023, 5:12 PM IST | Last Updated May 8, 2023, 5:12 PM IST

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டியுள்ள பகுதிகளில் மான், சிறுத்தை, வரையாடு, காட்டு யானை, காட்டுபன்றிகள் உள்ளிட்டவை வசித்து வருகின்றன. இவைகள் அவ்வபோது ஊருக்குள் நுழைவதும் வாடிக்கையாக இருந்து வருகிறது. இந்நிலையில் ஆயக்குடி, சட்டபாறை, கோம்பைபட்டி, ராம்பட்டிணம் பதூர் சத்திரபட்டி, புதுக்கோட்டை பகுதிகளில் கடந்த சில மாதங்களாக ஒற்றைக் காட்டு யானையின் அட்டகாசம் அதிகரித்துள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு சத்திரப்பட்டி அருகே புதுக்கோட்டையில் விவசாயி ஒருவரை மிதித்துக் கொன்ற யானை, அடுத்த சில நாட்களில் மற்றொரு விவசாயியையும் துரத்தி மிதித்து கொன்றது. இந்நிலையில் பகல் நேரத்திலேயே விவசாயிகள் தோட்டங்களில் சாதாரணமாக உலா வரும் காட்டுயாணை காட்சிகள் விவசாயிகள் செல்போனில் படம் பிடித்துள்ளனர். இந்த காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது, இது குறித்து ஒட்டன்சத்திரம் வனத்துறையினருக்கு தகவல் அளித்ததையடுத்து, வனதுறையினர் யானையை காட்டுக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.