நூற்றாண்டு பாரம்பரியமிக்க மாடு மாலை தாண்டும் நிகழ்ச்சி; ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

கொடைரோடு அருகே நூற்றாண்டு பழமை வாய்ந்த மாடு மாலை தண்டும் பாரம்பரிய நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் நூற்றுக்கணக்கான மாடுகள், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

First Published Jul 6, 2023, 7:03 AM IST | Last Updated Jul 6, 2023, 7:03 AM IST

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே தொப்பிநாயக்கன்பட்டி மற்றும் ஜல்லிப்பட்டி கிராமங்களில் முத்தாரம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. கடந்த மூன்று நாட்கள் நடைபெற்ற இத்திருவிழாவின் கடைசி நிகழ்வான அம்மன் ஊர்வலமாக பூஞ்சோலை செல்லும் நிகழ்ச்சியின் போது நூற்றாண்டு பழமைவாய்ந்த மாடு மாலை தாண்டும் பாரம்பரிய நிகழ்ச்சி நடைபெற்றது.

கிராம வழக்கப்படி மாடுகளை அலங்கரித்து ஊர்வளமாக அழைத்து வந்து முத்தாரம்மனை வழிபட்டு மாலை தாண்டும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் பல்வேறு பகுதியில் இருந்தும் கொண்டுவரப்பட்ட மாடுகள் அவிழ்த்து விடப்பட்டு பந்தயங்கள் நடைபெற்றன. இதில் வெற்றி பெற்ற மாடுகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது,  

பின்னர் கிராமத்து இளைஞர்களின் தேவராட்டத்துடன் திருவிழா நிறைவு பெற்றது. திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் திருவிழாவில் பங்கேற்றனர்.

Video Top Stories